Thursday, January 13, 2011

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் !!!!

Laptop விருந்தும்,
i-phone வத்த குழம்பும்,
Satellite ரசமும்,
Digital பொரியலும்,
Internet கூட்டும்,
3G பாயசமும்,
பசித்த வயிற்றுக்கு
பரிமாறிட கூடுமோ ?

டாலர்களும், யுரோக்களும்,
காகிதங்கள் மட்டுமே.
கரைத்து குடிக்க கூழ் அல்ல!!

ஆதியும் மீதியுமாய்
அலைந்து திரிந்து
உயிர் பொருட்கள் ஈட்டுகிற
மருத நில மனிதர்கள் மட்டுமே
பிரபஞ்சம் வாழ்விக்கின்ற
நிதர்சனம்

இது நிதர்சனத்துக்கு நன்றி
நவில்கிற விழா

இனிய பொங்கல்
நல்வாழ்த்துக்கள் !!!!

Regards
B M S

No comments:

Post a Comment